Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுகவின் அடிப்படை கொள்கையே நீட் விலக்கு தான் - ஜெயக்குமார் பேட்டி

அதிமுகவின் அடிப்படை கொள்கையே நீட் விலக்கு தான் – ஜெயக்குமார் பேட்டி

-

ஜெயக்குமார்

அதிமுகவின் அடிப்படை கொள்கையே நீட் விலக்கு தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாஜகவில் இருந்து அண்ணாமலையை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள்போல் இருக்கிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்டது தெரியாமல் லண்டன் செல்கிறேன், அரசியல் படிக்கிறேன் என்கிறார். தமிழகத்திற்கு நீட் தேவையில்லை என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. நாய் கூட பிஏ பட்டம் போட்டுக் கொள்கிறது என ஆர்.எஸ். பாரதி கூறுகிறார். நாய் வாலை நிமிர்த்த முடியாது. தமிழ்நாடு மட்டுமல்ல, அதிமுகவின் அடிப்படை கொள்கையே நீட் விலக்கு தான். இது குறித்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசிய கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். அவருக்கு எங்கள் நன்றி” என இவ்வாறு அவர் பேசினார்.

MUST READ