குழந்தையுடன் அமைச்சர் காலில் விழுந்த ஓட்டுநருக்கு பணி மாறுதல் ஆணை
கோவையில் அமைச்சர் சிவசங்கரின் காலில் குழந்தையுடன் விழுந்து கோரிக்கை வைத்த ஓட்டுநர் கண்ணனின் பணிமாறுதல் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் கோவையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ஓட்டுநர் கண்ணன், தனது ஆறு மாத குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்து, தனது சொந்த ஊருக்கு பணியிடமாறுதல் கோரினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. மனைவி முனிதா டெங்கு பாதிப்பால் மனைவி உயிரிழந்த காரணத்தால், 2 குழந்தைகளை பார்த்துக்கொள்ள வசதியாக சொந்த ஊருக்கு தேனிக்கு பணியிட மாற்றம் வேண்டும் என கண்ணன் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து ஓட்டுநர் கண்ணனை, அவர் விருப்பப்படி பணியிட மாற்றம் செய்து நேற்றிரவே அரசு உத்தரவிட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஓட்டுநர் கண்ணன் கோவையில் இருந்து தேனிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.