Homeசெய்திகள்தமிழ்நாடு"ஜூலை 1- ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்"- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

“ஜூலை 1- ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்”- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

-

- Advertisement -

 

ஓ.பன்னீர்செல்வம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அ.தி.மு.க.வின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம், அ.தி.மு.க.வின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச.ராமச்சந்திரன் தலைமையில், சென்னை எக்மோர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் வரும் ஜூலை 1- ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையைத் தொடர்ந்து தனியார் பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர்!

இந்த கூட்டத்தில், வரும் 2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், அடுத்தக்கட்ட நகர்வு குறித்தும், மாவட்ட வாரியாக ஆதரவை அதிகரிப்பது, கூட்டணி உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்டவாளத்தில் கற்கள்…ரயிலைக் கவிழ்க்க சதியா?- காவல்துறையினர் விசாரணை!

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ