Homeசெய்திகள்தமிழ்நாடுஜூன் 09- ல் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு!

ஜூன் 09- ல் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு!

-

 

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Photo: TNPSC

குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு… கேரள காவல்துறை விசாரணை…

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், “6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்- 4 தேர்வு வரும் ஜூன் 09- ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. குரூப்- 1 பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 13- ஆம் தேதி நடைபெறும்; 29 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1-B, குரூப் 1-C தேர்வு வரும் ஜூலை 12- ஆம் தேதி நடைபெறும்.

2,030 பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு வரும் செப்டம்பர் 28- ஆம் தேதி நடைபெறும்; டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரன்வீர் சிங்கின் டீப் பேக் விவகாரம்… டிவிட்டர் பயனாளர் மீது வழக்குப்பதிவு…

நடப்பாண்டில் மட்டும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் மூலம் சுமார் 6,000 பணியிடங்களை நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

MUST READ