தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான கருணாநிதி பெயரில் சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் ஜூன் 15- ஆம் தேதி அன்று திறந்து வைக்கவுள்ளார்.
சாதனை படைத்த தோனி…..ஆரஞ்சு, ஊதா நிற தொப்பிகளைப் பெற்ற வீரர்கள் யார்?
விரைவில் இது குறித்து தமிழக அரசுக்கு எழுத்துப் பூர்வமாக தகவல் அளிக்கப்படும் என குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
முன்னதாக, இந்த மருத்துவமனையை ஜூன் 5- ஆம் தேதி திறக்க திட்டமிடப்பட்டு, குடியரசுத் தலைவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், குடியரசுத் தலைவரின் வெளிநாட்டு பயணம் காரணமாக, திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது.
ஜப்பானின் ஒம்ரான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!
கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 230 கோடி ரூபாய் செலவில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.