Homeசெய்திகள்தமிழ்நாடுஅமலாக்கத்துறை மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது- கே.பாலகிருஷ்ணன்

அமலாக்கத்துறை மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது- கே.பாலகிருஷ்ணன்

-

அமலாக்கத்துறை மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது- கே.பாலகிருஷ்ணன்

பா.ஜ.க. ஒரு மூழ்கும் கப்பல், அமலாக்கத்துறை அதன் இளைஞர் அணி என சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை திருந்தவில்லை என்றால் அவர் சார்ந்த கட்சியாவது அவரை திருத்துமா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளார் கே.பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த 2006 -2011 வரை கனிம வளத்துறை அமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்கு தொடரப்பட்டது. அதிமுக ஆட்சியில் 2012 ஆம் ஆண்டு பதிவு செய்த இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து சோதனை நடத்திவருகிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “அமலாக்கத்துறை மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது. ஒரு வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் திடீரென சோதனை மேற்கொள்வது கண்டனத்திற்குரியது. இந்த சோதனைகள் பா.ஜ.க மீது மேலும் வெறுப்பை ஏற்படுத்தும். எதிர்கட்சிகள் கூட்டத்தை இருட்டடிப்பு செய்யும் வகையில் சோதனை. பா.ஜ.க. ஒரு மூழ்கும் கப்பல், அமலாக்கத்துறை பா.ஜ.கவின் இளைஞர் அணி போல செயல்படுகிறது. பாஜக எதிர்க்கட்சிகளை பயமுறுத்த அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது” என தெரிவித்தார்.

MUST READ