Homeசெய்திகள்தமிழ்நாடுவேண்டுமென்றே அவதூறு பரப்பிய எடப்பாடி பழனிச்சாமிக்கு கே. சி. பழனிச்சாமி கண்டனம்

வேண்டுமென்றே அவதூறு பரப்பிய எடப்பாடி பழனிச்சாமிக்கு கே. சி. பழனிச்சாமி கண்டனம்

-

- Advertisement -

எடப்பாடி பழனிச்சாமி என்னை அவதூறு செய்ய சிறுமைப்படுத்த ஒருங்கிணைப்பு தொடர்பான கேள்விக்கு விமான நிலையத்தில் பேசி உள்ளார் என கே. சி. பழனிச்சாமி கூறியுள்ளாா்.வேண்டுமென்றே அவதூறு பரப்பிய எடப்பாடி பழனிச்சாமிக்கு  கே. சி. பழனிச்சாமி கண்டனம்மேலும், இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில், எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஜூலை மாதம் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ஜெயலலிதாவால் நீக்கப்பட்டதாக, தெருவுல செல்கிறவர் என்று கூறினார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக கூறியது தொடர்பாக அவதூறு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்ததில், கீழ்மை நீதிமன்றம் முடிவு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த வழக்கில் 3 வாய்தாக்கள் அவகாசம் கொடுக்கப்பட்டும், ஆதாரம் இல்லையென என சொன்னதை அடுத்து, குற்ற வழக்கு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீதான வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலேயே, பேசுவது குற்றம் என்று தெரிந்தே வேண்டுமென்றே என்னை அவதூறு செய்ய சிறுமைப்படுத்த ஒருங்கிணைப்பு தொடர்பான கேள்விக்கு விமான நிலையத்தில் பேசி உள்ளார். இதுதொடர்பாக தாக்கல் செய்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அவர் இன்று சட்டமன்றம் காரணத்தினால் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் ஆஜராகி உள்ளாா்.  இந்த வழக்கில் உரிய தண்டனை வழங்கப்படும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளாா்.

வக்பு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் – தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா

 

MUST READ