Homeசெய்திகள்தமிழ்நாடு"கச்சத்தீவை மீட்பதற்கு பா.ஜ.க. என்ன நடவடிக்கை எடுத்தது?"- செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கேள்வி!

“கச்சத்தீவை மீட்பதற்கு பா.ஜ.க. என்ன நடவடிக்கை எடுத்தது?”- செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கேள்வி!

-

 

"கச்சத்தீவை மீட்பதற்கு பா.ஜ.க. என்ன நடவடிக்கை எடுத்தது"- செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கேள்வி!

தேர்தல் நேரத்தில் மட்டும் பேசாமல் கடந்த 10 வருடமாக கச்சத்தீவை மீட்பதற்கு பா.ஜ.க. என்ன நடவடிக்கை எடுத்தது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.

பேருந்தில் டீசல் திருடிய 3 பேர் கைது!

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டதையும், 1,800 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செலவப்பெருந்தகை எம்.எல்.ஏ., “கச்சத்தீவு வரலாறை பிரதமர் நரேந்திர மோடி படிக்க வேண்டும். ஒன்றை கொடுத்து ஒன்றை பெறும் முறையில் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது. விலைமதிக்க முடியாத கனிமங்கள் இந்திய எல்லையில் உள்ளது. அப்போது இருந்த வெளியுறவுத்துறை செயலாளர்களாக இருந்த என எல்லோரையும் அழைத்து கச்சத்தீவு விவகாரம் எப்படி செயல்படுத்தப்பட்டது என பிரதமர் மோடி கேட்க வேண்டும்.

“ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்றாரே மோடி- செய்தாரா?”- கி.வீரமணி கேள்வி!

லடாக்கில் லட்சக்கணக்கான நிலங்களை சீனாவிடம் பிரதமர் மோடி தாரை வார்த்துள்ளார். அதற்கு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு பா.ஜ.க.விற்கு அறுகதை இல்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் பேசாமல் கடந்த 10 வருடமாக கச்சத்தீவை மீட்பதற்கு பா.ஜ.க. என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வியெழுப்பிய அவர், மிகப்பெரிய ஆளுமை என கூறிக்கொள்ளும் மோடி ஏன் கச்சத்தீவை இதுவரை மீட்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

"கச்சத்தீவை மீட்பதற்கு பா.ஜ.க. என்ன நடவடிக்கை எடுத்தது"- செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கேள்வி!

முன்னதாக உரையாற்றிய செல்வப்பெருந்தகை, “அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ சோதனைகளை வைத்து எதிர்கட்சியினரை மிரட்டி வருகின்றனர். இந்திய வரலாற்றில் முதல் முறை ஐ.நா சபை இந்தியாவை கண்டித்துள்ளது மோடியின் ஆட்சியில்தான். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது, அபராதம் விதித்தை ஐ.நா சபை கேள்வியெழுப்பியுள்ளது. எந்த சட்டத்தின் அடிப்படையில் அபராதம் விதிக்கிறது வருமானவரித்துறை என கேள்வியெழுப்பினார்.

‘மக்களவைத் தேர்தல் 2024’- கரூர் தொகுதியில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம்!

தேர்தல் ஆணையத்தில் வருமான வரி உச்சவரம்பை தாக்கல் செய்தும் அபராதம் விதிக்கிறதென்றால் பாசிச பா.ஜ.க.விற்கு எவ்வளவு வன்மம் இருக்கும். 4,613 கோடி பா.ஜ.க.விற்கு அபராதம் விதிக்காதது ஏன் என வருமானவரித்துறை கேட்கவில்லை. பா.ஜ.க. இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை தழுவும். ஆட்சி மாற்றம் ஏற்படும் போது 4,614 கோடி பா.ஜ.க.விற்கும் அபராதம் விதிக்கப்படும்” என பேசினார்.

MUST READ