கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள வரும் இந்திய பக்தர்கள், சட்ட விதிகளைப் பின்பற்றித் தடைச் செய்யப்பட்டப் பொருட்களை எடுத்து வர வேண்டாம் என நெடுந்தீவு பங்குத்தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கவின்… அடுத்தடுத்து அதிரடி கிளப்பும் கவின்…
கச்சத்தீவு திருவிழா வரும் பிப்ரவரி 23- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு மறுநாள் பிப்ரவரி 24- ஆம் தேதி கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவடையவுள்ளது. இதில் இலங்கை, இந்திய பக்தர்கள் என சுமார் 8,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கச்சத்தீவு திருவிழாவையொட்டி பேசிய நெடுந்தீவு பங்குத்தந்தை பத்ரிநாதன், “கச்சத்தீவு புனித அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு தலா ஒருவருக்கு 1,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 23- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து கடைசி பேருந்து இயக்கப்படும்.
விஜய்க்கு வாக்களிப்பேனா என தெரியாது… நடிகர் அர்ஜூன் தாஸ் பளிச் பதில்…
இந்தியாவில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் இந்திய சட்ட விதிகளைப் பின்பற்றி தடைச் செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வர வேண்டாம்” என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.