Homeசெய்திகள்தமிழ்நாடு"ஓட்டு வாங்கவே கச்சத்தீவு கையிலெடுப்பு"- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

“ஓட்டு வாங்கவே கச்சத்தீவு கையிலெடுப்பு”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

-

- Advertisement -

 

edappadi

மதுரை மாவட்டம், வலையங்குளத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் எழுச்சி மாநாட்டில் உரையாற்றிய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “தற்போது ஆட்சி செய்து வரும் தி.மு.க.விற்கு பொய்தான் மூலதனம். கச்சத்தீவை மீட்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பச்சை பொய் பேசுகிறார். கடந்த 2008- ல் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்க நடவடிக்கைக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

“தி.மு.க.வின் நாடகத்திற்கு மக்கள் முடிவுக் கட்டுவார்கள்”- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அறிக்கை!

கடந்த 2011- ல் சட்டப்பேரவையில் கச்சத்தீவு மீட்புத் தீர்மானத்தை அ.தி.மு.க. நிறைவேற்றியது. 13 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க. கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. மீனவர்களின் வாக்குகளைப் பெறவே கச்சத்தீவு விவகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.

ஆட்சியை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் தான் கச்சத்தீவை மீட்போம் என முதலமைச்சர் பேசுகிறார். கச்சத்தீவு ஒப்பந்தத்தை நீக்க மத்தியில் ஆட்சி, அதிகாரத்தில் இருந்த போது தி.மு.க. முயற்சி செய்யவில்லை. நீட் தேர்வைக் கொண்டு வந்தது தி.மு.க.; நீட் தேர்வைத் தடுக்க போராடியது அ.தி.மு.க. நீட் தேர்வை ரத்துச் செய்யக்கோரி தி.மு.க. நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் மிகப்பெரிய நாடகம். தமிழகத்தில் நீட் தேர்வைக் கொண்டு வந்தது தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான்.

“பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட தயாரா?”- ஆளுநருக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அ.தி.மு.க. 2010-ல் சுகாதாரத்துறை இணையமைச்சராக தி.மு.க.வின் காந்திசெல்வன் இருந்த போது நீட் வந்தது. டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூபாய் 10 கோடி முறைகேடு நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 3,600 பார்கள் முறைகேடாக இயங்கி வருகின்றன. முறைகேடாக நடக்கும் பார்களில் கலால்வரி செலுத்தாமல் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. முறைகேடு பார்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான கோடி பணம் தி.மு.க. மேலிடத்திற்கு செல்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ