Homeசெய்திகள்தமிழ்நாடுகாதல் கோட்டை, வெற்றிக் கொடிகட்டு படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கைது!

காதல் கோட்டை, வெற்றிக் கொடிகட்டு படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கைது!

-

 

காதல் கோட்டை, வெற்றிக் கொடிகட்டு படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கைது!

காதல் கோட்டை, வான்மதி உள்ளிட்டத் திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் காசோலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

‘கருணாநிதியின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள்’…..’கலையும், அரசியலும்’ என்ற தலைப்பில் மினி திரையரங்கம்!

வெற்றிக் கொடிக்கட்டு, கடல் பூக்கள், காதல் கோட்டை, வான்மதி உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் சிவசக்தி பாண்டியன். இவர் கடந்த 2010- ஆம் ஆண்டு அர்ஜுனன் காதலி என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமைத்தை வழங்குவதாகக் கூறி, பிரபல தனியார் தொலைக்காட்சி நிர்வாகத்திடம் முன்பணமாக ரூபாய் 50 லட்சம் பெற்றுள்ளார்.

பின்னர் தொலைக்காட்சி உரிமத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் தனியார் தொலைக்காட்சி நிறுவனம், பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளது. அதனால் வட்டியுடன் சேர்த்து சிவசக்தி பாண்டியன் கொடுத்த காசோலை, பணம் இல்லாமல் திரும்பியுள்ளது. இது தொடர்பாக, சிவசக்தி பாண்டியன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு – மனைவி படுகாயம்!

வழக்கில் வட்டியுடன் சேர்த்து 1 கோடியே 46 லட்சம் ரூபாய் பணத்தை தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், 60 நாட்களுக்குள் 30% தொகையை முதற்கட்டமாக வழங்கவும் உத்தரவு பிறப்பித்தனர்.

ஆனால் உத்தரவிட்ட தேதிக்குள் பணத்தைத் திருப்பித் தராததால் சிவசக்தி பாண்டியனுக்கு கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, சிவசக்தி பாண்டியனை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ