Homeசெய்திகள்தமிழ்நாடு'கலைஞர், அண்ணா நினைவிடங்கள் திறப்பு'- அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.கஸ்டாலின் அழைப்பு!

‘கலைஞர், அண்ணா நினைவிடங்கள் திறப்பு’- அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.கஸ்டாலின் அழைப்பு!

-

 

'கலைஞர், அண்ணா நினைவிடங்கள் திறப்பு'- அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.கஸ்டாலின் அழைப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் நினைவிடம் திறப்பு விழாவில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் அழைப்பு விடுத்தார்.

விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் மோகன் அஞ்சலி… 1000 பேருக்கு அன்னதானம்…

சென்னை மெரினா கடற்கரையில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் திறப்பு விழா தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பேரவைத் தலைவர் அவர்களே, நின்ற தேர்தல்களில் எல்லாம் வென்ற தலைவர்; நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர்; முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய நினைவிடம் அமைக்கும் பணி முழுமையடைந்திருக்கிறது. தலைவர் கலைஞர் அவர்களுடைய நினைவிடம் மட்டுமல்ல; தலைவர் கலைஞர் அவர்களை உருவாக்கிய, நம் தாய்த் தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டிய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவிடமும் புனரமைக்கப்பட்டு, அப்படிப் புதுப்பிக்கப்பட்டிருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணா அவர்களுடைய நினைவிடமும், தலைவர் கலைஞர் அவர்களுடைய புதிய நினைவிடமும் வருகிற பிப்ரவரி 26- ஆம் தேதி மாலை 07.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளன என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தனுஷ் நடிக்கும் ராயன்… மிரட்டலான லுக்கில் எஸ்.ஜே.சூர்யா…

எதற்காக இதை இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எதையும் நாங்கள் அச்சிடவில்லை. அதனை ஒரு விழாவாக இல்லாமல், நிகழ்ச்சியாகவே நடத்திட நாங்கள் விரும்பியிருக்கிறோம்; முடிவெடுத்திருக்கிறோம். ஆகவே, அந்த நிகழ்ச்சியிலே இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லாக் கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டுமென்று பேரவைத் தலைவர் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கும் தங்கள் மூலமாக அழைப்பு விடுத்து அமர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ