Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் இதுவரை 15 பேர் கைது!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் இதுவரை 15 பேர் கைது!

-

- Advertisement -
ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி- முன்னாள் காவல்துறை அதிகாரி கைது!
File Photo

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் அருகிலுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் மற்றும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர்.இதுவரை 57 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சிவகுமார், கதிரவன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அய்யாசாமி மற்றும் தெய்வரா ஆகிய இருவரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராய வியாபாரி சின்னதுரைக்கு உதவியதாக இருந்ததாக அரிமுத்து என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

MUST READ