Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் - பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு!

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் அருகிலுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள் மற்றும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 52 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், 90 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Kallakurichi illicit liquor issue

கள்ளச்சாராயம் குடித்து பலியானோர்களில். கள்ளக்குறிச்சியில் 28 பேரும், சேலத்தில் 17 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

 

 

MUST READ