கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் கைதான மாதேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி மெத்தனால் கலந்த விஷச் சாராயம் அருந்திய 200க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 67 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழநதனர்.
மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை விற்பனை செய்த வழக்கில் 22 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் முக்கிய குற்றவாளியான மாதேஷ், சிவக்குமார், ஏழுமலை, ஜோசப் ஆகிய 4 பேரை போலிசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதேபோல் வழக்கில் தொடர்புடை மற்ற 17 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.