Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் விவகாரம்.... தமிழ்நாடு அரசு விளக்கம்!

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் விவகாரம்…. தமிழ்நாடு அரசு விளக்கம்!

-

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளைப் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கும் நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதியை நிலைநாட்டுவதில் பெரும் அக்கறை கொண்டுள்ள திராவிட மாடல் அரசு நாட்டிற்கே முன்னோடி திட்டங்களைச் செயல்படுத்தி வருதாகவும், மக்கள் தொகையில் பெரும்பகுதியினரான பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு, சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கிவரும் 299 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. மேலும், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள், இலவச மருத்துவப் பரிசோதனைகள், ஆங்கில வழிக்கல்வி போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருவதாகவும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.

tamilnadu assembly

இந்நிலையில், இப்பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, இப்பள்ளிகள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் தனித்துவத்தோடு இயங்கி வருவதாகவும், அவற்றை மேலும் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானதும் மற்றும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

MUST READ