Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு!

கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு!

-

 

கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு!

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது தண்ணீரைப் பீய்ச்சியடிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவானது இம்மாதம் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வரும் ஏப்ரல் 23- ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதனை காண மதுரை சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்து, கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து மகிழ்வர்.

இந்த நிலையில், தங்கத்திலான கள்ளழகர் மீது தண்ணீரை ராட்சத மோட்டார்கள் மூலம் பீய்ச்சி அடிப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், சித்திரை திருவிழாவின் போது. கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிப்பதற்கு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

அந்த உத்தரவில், “பாரம்பரிய முறையில் தோல் பை வைத்து மட்டுமே தண்ணீரைப் பீய்ச்சியடிக்க வேண்டும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் போது உயர் அழுத்த மோட்டார் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் அழகர் மலையில் இருந்து வைகை ஆறு வரும் வரையில் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ