காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் மேயர் பதவி தப்பியது
காஞ்சீபுரம் மாநகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா. கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர்கள் என மொத்தம் 51 கவுன்சிலர்கள் உள்ளனர்
அதில் திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரகுருபரன் துணை மேயராகவும் பதவியில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பதவியேற்ற சில மாதங்களில் மேயருக்கு எதிராக பெரும்பான்மையான நகர்மன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். மேலும் திமுக உறுப்பினர்களே மேயருக்கு களத்தில் இறங்கினார்கள். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் திமுக மாவட்ட செயலாளர் கா.சுந்தர் இந்த தகவலை உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் கொண்டு சென்று பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போதும் தீர்வு காணப்படவில்லை.
மேயரை மாற்றியே தீர வேண்டும் என்று கொடி பிடித்தனர். இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
திமுக மேயர் மகாலட்சுமி யுவராஜ் எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவர மாமன்றம் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் மேயருக்கு எதிரான மாமன்ற உறுப்பினர்கள் 35 பேர், ஆதரவு உறுப்பினர்கள் 10 பேர் சுற்றுலாவிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. மேயரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் 5ல் 4 பங்கு பேர் மேயருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
அதாவது 51 உறுப்பினர்களில் 41 பேர் மேயருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். அப்போது தான் மேயர் பதவியில் இருந்து நீக்க முடியும். இந்த நிலையில் பெரும்பாலான உறுப்பினர்கள் சுற்றுலா சென்று விட்டதால் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் கலந்து கொள்ள வில்லை. அதனால் மேயருக்கு எதிரான தீர்மானம் தோல்வியில் முடிந்தது. தாம்பரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் யின் பதவி தப்பியது.