
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் இன்று (அக்.14) மாலை 06.00 மணிக்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
“பாலின சமத்துவத்துக்கு போராடியவர் கருணாநிதி”- சோனியா காந்தி புகழாரம்!
மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசும் பொழுது தலைவராக மட்டுமல்ல, அண்ணனாகப் பெருமைப்படுகிறேன். பெண் இனத்தின் எழுச்சி போல் தி.மு.க.வின் மகளிர் உரிமை மாநாடு நடக்கிறது. தமிழ்நாட்டின் பெண்கள் மாநாடு போன்று இல்லாமல் இந்தியாவின் பெண்கள் மாநாடு போல நடைபெறுகிறது.
சென்னை சங்கமம் நடத்திக் காட்டிய கனிமொழி இப்போது இந்திய சங்கமத்தை நடத்திக் காட்டியுள்ளார். பா.ஜ.க.வைத் தோற்கடிக்க வேண்டியது இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயகக் கட்சிகளின் கடமை. பா.ஜ.க. ஆட்சியில் மகளிர் உரிமை மட்டும் இன்றி அனைத்து மக்களின் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே பண்பாடு என்கிற பா.ஜ.க.வின் ஆட்சி 2024- க்கு பின் மத்தியில் இருக்கப் போவதில்லை.
இஸ்ரேலில் இருந்து இதுவரை 49 தமிழர்கள் தாயகம் திரும்பினர் – அமைச்சர் தகவல்
தமிழகத்தில் ஆண்களுக்கு இடஒதுக்கீடு கேட்க வேண்டிய நிலை வரும் என நினைக்கிறேன். தமிழகத்தின் உள்ளாட்சியில் 50% மேல் இடஒதுக்கீடு உள்ளதால் ஆண்களுக்கு இடஒதுக்கீடு கேட்க வேண்டிய நிலை வரும். இந்தியா கூட்டணி தேர்தல் கூட்டணி இல்லை; கொள்கை கூட்டணி. எந்த நிலையிலும் சமூக நீதியை விட்டு தரக்கூடாத; வாழ்க் இந்தியா, வாழ்க இந்தியா கூட்டணி” எனத் தெரிவித்துள்ளார்.