நடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நின்று வெற்றி பெற்ற கனிமொழி தற்போது அதே தொகுதியில் வேட்பாளராக களம் காண்கிறார்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி நேற்று ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் நிராகரித்து, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக அயராது உழைக்கும் நம் கழகத்திற்கு மகத்தான வெற்றியை நாசேரத் மக்கள் பெற்றுத் தரவுள்ளனர். நாசேரத்தில் பேருந்து நிலையம், நாலுமுக்கு சந்தி மற்றும் கே.வி.கே.சாமி அவர்களின் சிலை அருகில் கூடிய மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.