Homeசெய்திகள்தமிழ்நாடுகோவில்பட்டியில் கனிமொழி தேர்தல் பிரச்சாரம்!

கோவில்பட்டியில் கனிமொழி தேர்தல் பிரச்சாரம்!

-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி நேற்று கோவில்பட்டியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி எம்.பி நேற்று கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான காமராஜர் சிலை, வேலாயுதபுரம், புது கிராமம், ஜோதி நகர் ஆகிய பகுதியில் திறந்தவெளியில் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் பேசிய அவர் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தை மோடி ஆட்சியில் முடக்கிக் கொண்டிருக்கிறார்கள். மோடி அரசு 100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதே இல்லை. இந்தியா முழுவதும் 15 நாள் வேலை கிடைப்பதில்லை பெரிய விஷயமாகவுள்ளது. இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலை திட்டம் மீண்டும் சிறப்பாக செயல்படுத்தப்படும். மேலும் 100 நாள் வேலையை 150 நாளாகவும் சம்பளம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் சமையல் கியாஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும். பெட்ரோல் 75 ரூபாய்க்கும் டீசல் 65 ரூபாய்க்கும் வழங்கப்படும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். மேலும் பேசிய அவர் தூத்துக்குடி எனது இரண்டாவது தாய் வீடு என்று சொல்லும் அளவிற்கு உங்களின் அன்பை பெற்றவளாக இருக்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ