அண்ணாமலை நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும்- கனிமொழி எம்பி
தூத்துக்குடியில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழாவை கனிமொழி எம்பி தொடங்கிவைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நிச்சயமாக நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும். அண்ணாமலைக்கு விரைவில் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்படும். ஊழல் பட்டியல் விவகாரத்தில் நானும் வழக்கு தொடர உள்ளேன். அதற்கு அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும். திமுக தரப்பில் ஏற்கனவே அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிச்சயம் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
கடந்த 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில், கனிமொழிக்கு ரூ.830.33 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக, சட்டநடவடிக்கை எடுத்துவருகிறது.