Homeசெய்திகள்தமிழ்நாடுகர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் திடீர் ராஜினாமா!

கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் திடீர் ராஜினாமா!

-

 

கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் திடீர் ராஜினாமா!

கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள் – ஈபிஎஸ்!

கர்நாடக மாநில அ.தி.மு.க.வின் செயலாளர் எஸ்.டி.குமார் இன்று (ஏப்ரல் 10) மதியம் 02.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாகவே கர்நாடகாவில் அ.தி.மு.க.வை வைத்துள்ளார். கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க. சார்பில் போட்டியிட அனுமதிக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் விருப்ப மனு கொடுக்கப்பட்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பெரிதாக வைத்துள்ளார். அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை ஸ்டாம்ப் சைஸில் வைத்துள்ளார். இது எம்.ஜி.ஆரை சிறுமைப்படுத்தும் செயல் ஆகும். எனவே, எனது கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று அறிவித்துள்ளார்.

MUST READ