காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கொரட்டூரில் அரிசி வியாபாரம் செய்வது போல் விளம்பர பலகை வைத்து குட்கா வியாபாரம் செய்தவர் கைது
தமிழகம்- கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீட்டு கொள்வது குறித்து, கடந்த வாரம் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. அப்போது, அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப் பரிந்துரைச் செய்தது.
ஆனால் அதன்படி, கர்நாடகா தண்ணீரைத் திறக்கவில்லை. இந்த நிலையில், டெல்லியில் இன்று (செப்.18) காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க, கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பார் உரிமையாளர் வீட்டில் 50 சவரன் நகை, 60 லட்சம் பணம் கொள்ளை..
அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.