Homeசெய்திகள்தமிழ்நாடு"கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது"- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!

“கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது”- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!

-

 

அமைச்சரவை மாற்றமா?- ஆளுநரைச் சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்!
File Photo

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று அந்த மாநில நீர்வளத்துறை அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

‘குஷி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!

இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகாவில் உள்ள முக்கிய நான்கு அணைகளில் 63 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் பெய்யும் மழையின் அடிப்படையில் சுமார் 10 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். வடகிழக்கு பருவமழைக் காலங்களில் குறைந்தது 30 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது.

15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது மிகக் குறைவு தான். மிகக்குறைந்த அளவு நீர் வழங்க உத்தரவிட்டும் முடியாது என கர்நாடக அமைச்சர் கூறியிருப்பது நியாயமில்லை. குடிநீர் தேவை என்ற போர்வையில் கர்நாடகா தண்ணீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.

கே ஜி எஃப் யாஷின் 19 வது படத்தை இயக்கும் மலையாள பெண் இயக்குனர்!

இரு மாநில விவசாயிகளின் நலனை கருதாமல் தமிழகத்திற்கு நீர் வழங்க முடியாது என கர்நாடக மூத்த அமைச்சர் கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்து காவிரி நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழநாடு அரசு மேற்கொள்ளும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ