திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத்திருவிழாவையொட்டி, இன்று (நவ.26) கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதற்காக, கோயிலுக்கு 5,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும், இந்த மகா தீபம் 11 நாட்களுக்கு தொடர்ந்து, எரிவதற்காக 4,500 கிலோ நெய்யும், 1,500 மீட்டர் காடாத்துணியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!
தீபத்திருவிழாவைக் காண்பதற்கு 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளனர். இதில், குற்றத்தடுப்பு, பாதுகாப்புப் பணி மற்றும் போக்குவரத்தைச் சீர் செய்ய 14,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், குற்றச் செயல்களைக் கண்காணிக்க 10 ட்ரோன் கேமராக்களும், காணாமல் போன குழந்தையைக் கண்டறிய 35 ஆயிரம் பேண்ட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளன. தலைமையக காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க 19 இடங்களில் 50 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்காக ‘அய்யன்’ செயலி அறிமுகம்!
குறிப்பாக, தீபத்திருவிழாவைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 2,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெளியூரில் இருந்து வரும் பேருந்துகளுக்காக, ஒன்பது தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்து, அங்கிருந்து கோயிலுக்கு சென்று வர 40 சிற்றுந்துகள் இலவசமாக இயக்கப்படுகின்றன.
தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் இன்று (நவ.26) மாலை 06.00 மணிக்கு ஏற்றப்படுகிறது. மகா தீபத்தை மலை மீது சென்று தரிசிக்க 2,500 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.