Homeசெய்திகள்தமிழ்நாடுகார்த்திகை தீபத் திருவிழா : திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

கார்த்திகை தீபத் திருவிழா : திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

-

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி காட்பாடி, தாம்பரம் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு முன்பதிவில்லா ரயிலானது விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு காலை 10 மணி அளவில் வந்து சேரும். இதேபோல், காட்பாடியில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா ரயிலானது இரவு 7.30 மணிக்கு விழுப்புரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் இருந்து விழுப்புரத்தில் இருந்து  வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் காலை 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது பிற்பகல் 3 மணிக்கு காட்பாடி சென்றடையும். மற்றொரு சிறப்பு ரயில் விழுப்புரத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு,இரவு 11.45 மணிக்கு காட்பாடி சென்றடையும்.

கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் இருத்து வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் பிற்பகல் 2.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் இரவு 10.25 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 2.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

விழுப்புரத்தில் இருந்து வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் மாலை 4.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். இதேபோல், விழுப்புரத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் மற்றொரு சிறப்பு ரயிலானது இரவு 9.20 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் திருவண்ணாமலையில் இருந்து வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை 4.20 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். திருவண்ணாமலையில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்படும் மற்றொரு சிறப்பு ரயில் இரவு 7.40 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

MUST READ