சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் இன்று (அக்.14) மாலை 06.00 மணிக்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!
மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, “பாலின சமத்துவத்திற்காக போராடியவர் கலைஞர் கருணாநிதி. நம்முடைய போராட்டம் இன்னும் நீண்ட நெடிய தூரம் பயணிக்க வேண்டும். பெண்ணுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது குடும்பத்திற்கான கல்வி என்று நேரு கூறினார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் தரிசனம் – தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை
இந்திரா காந்தி ஆற்றல், வழிகாட்டுதல், தலைமையேற்று செயல்படுதல் என்பதற்கு எடுத்துக்காட்டு. ராஜீவ்காந்தி வரலாற்று புகழ்மிக்க 33% இடஒதுக்கீட்டை உள்ளாட்சி & ஆட்சியில் கொண்டு வந்தார். மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை மத்திய அரசு எப்போது அமலுக்கு கொண்டு வரப் போகிறது. அரசு பணியில் மகளிருக்கான இடஒதுக்கீடு 40% ஆக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகரித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.