
தி.மு.க.வின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
‘பாரதியார் மண்டபம்’ ஆன தர்பார் ஹால்!
சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.
‘காவிரி விவகாரம்’: மத்திய அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!
அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சாலை முழுக்க கருணாநிதியின் புகைப்படங்கள், அவர் எழுதிய கவிதைகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. கருணாநிதி நினைவிடம் வரை செல்லும் அமைதி பேரணியில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் என 1,000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.