Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது, மக்கள் எப்போதும் திமுக பக்கம் என்பதை உணர்த்துகிறது - கருணாஸ்

இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது, மக்கள் எப்போதும் திமுக பக்கம் என்பதை உணர்த்துகிறது – கருணாஸ்

-

தி.மு.க.வுக்கு கருணாஸ் ஆதரவு!

இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது, மக்கள் எப்போதும் திமுக பக்கம் என்பதை உணர்த்துகிறது என கருணாஸ் தெரிவித்துள்ளார்.

இது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றியடைந்திருப்பது, மக்கள் நலத்திட்டங்களை அன்றாடம் வரவேற்கும் மக்களின் வெற்றி! நாற்பதுக்கு நாற்பது வெற்றியை எட்டிய சில நாள்களில் அடுத்த வெற்றியை அள்ளிக்கொடுத்த விக்கிரவாண்டி மக்களுக்கு எனது முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நன்றியையும்.. தி.மு.க தலைவர் சகோதரர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது.. மக்கள் எப்போதும் திமுக பக்கம் என்பதை உணர்த்துகிறது. அதே சமயம்.. பாசிச பாஜகவின் தொடர் தோல்வியின் சரிவையும் காட்டுகிறது. இனியாவது பாசிச பாஜக தமிழக மக்களின் உணர்வை புரிந்து கொள்ளட்டும்.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பெரும் தோல்வி முகத்தை கண்டுள்ளது.. இனியாவது மக்கள் ஜனநாயகத்தின் உணர்வை பாஜக புரிந்துகொள்ளட்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் திமுக ஆட்சி எப்போதும் வழிகாட்டும் என்பதை இந்த இடைத்தேர்தலின் வழியாக எடைபோட்டுச் சொல்லியிருக்கிறார்கள் விக்கிரவாண்டி பெருமக்கள். வெற்றிபெற்ற வேட்பாளருக்கும், தி.முக. தலைவர் சகோதரர் முகஸ்டாலின் அவர்களுக்கும் எனது மனமார்ந்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ