கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கியது தொடர்பான வழக்கில் காவல்துறையினர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 3-ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும்
கடந்த மே 25- ஆம் தேதி அன்று கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது, அதிகாரிகளைத் தாக்கியது, ஆவணங்களை எடுத்துச் சென்ற 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கீழமை நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் மற்றும் முன் ஜாமீனை வழங்கியிருந்தது.
இந்த நிலையில், அந்த 19 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மற்றும் முன் ஜாமீனை ரத்துச் செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வருமான வரித்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று (ஜூன் 21) விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “வருமான வரித்துறை சோதனையின் போது, ஒரு கூட்டம் அதிகாரிகளை தாக்கி மடிக்கணினி, பென்டிரைவ், பணத்தைப் பறித்தது. பறிக்கப்பட்ட பென்டிரைவ்களில் அரசுத் தொடர்புடைய முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
பறிக்கப்பட்ட பென்டிரைவ், மடிக்கணன திரும்பத் தரப்பட்ட போதிலும் பென்டிரைவில் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனையில் 1 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியது. கூட்டம் பறித்துச் சென்ற சோதனையில் கைப்பற்றிய பணம் திரும்ப வழங்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கில் கைதான 19 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மற்றும் முன் ஜாமீனை ரத்துச் செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும், பதிவுச் செய்துக் கொண்ட நீதிபதிகள், வருமான வரித்துறை மனு மீதான விசாரணையை வரும் ஜூலை 10- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக கரூர் நகர காவல் ஆய்வாளர், தாந்தோணிமலை உதவி ஆய்வாளர் உட்பட 19 பேர் பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.