- Advertisement -
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 08) காலை 10.00 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம், கோவிலம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் – விருதுநகர் மாவட்டம் முதலிடம்
இந்த நிகழ்வின் போது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சியை தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, எஸ்.அரவிந்த் ரமேஷ், காவேரி மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் எஸ்.சந்திர குமார், மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ்.மணிவண்ணன், செயல் இயக்குநர் டாக்டர் எஸ்.அரவிந்தன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.