Homeசெய்திகள்தமிழ்நாடுகாவி வேட்டியில் பேரவைக்கு வந்துள்ள ஓ.பன்னீர்செல்வம்!

காவி வேட்டியில் பேரவைக்கு வந்துள்ள ஓ.பன்னீர்செல்வம்!

-

- Advertisement -

 

காவி வேட்டியில் பேரவைக்கு வந்துள்ள ஓ.பன்னீர்செல்வம்!
Photo: TN Govt

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காவி வேட்டி அணிந்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

“கப்பலோட்டிய தமிழரை நன்றிப் பெருக்குடன் நினைவுக் கூர்வோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (நவ.18) காலை 10.00 மணிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, என்.சங்கரய்யா, பங்காரு அடிகளார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் முன்மொழிந்து பேசினார்.

இதனிடையே, காவி வேட்டி அணிந்துக் கொண்டு சட்டப்பேரவைக்கு வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். எனினும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. கட்சியின் நிறத்திலான கரை வேட்டியை அணிந்துள்ளனர்.

“சட்டமன்றத்தை ஆளுநர் அவமதிக்கிறார்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அ.தி.மு.க. கட்சியின் கொடி, சின்னம், லெட்டர் பேட், பெயர் போன்றவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ