Homeசெய்திகள்கவரைப்பேட்டை ரயில் விபத்து வழக்கு... ரயிலை கவிழ்க்க சதி என்ற பிரிவு புதிதாக சேர்ப்பு

கவரைப்பேட்டை ரயில் விபத்து வழக்கு… ரயிலை கவிழ்க்க சதி என்ற பிரிவு புதிதாக சேர்ப்பு

-

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ஏற்கெனவே 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட நிலையில், தற்போது ரயிலை கவிழ்க்க சதி என்ற பிரிவு புதிதாக  சேர்க்கப்பட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டம் கவரைப்பேட்டையில் கடந்த 11ஆம் தேதி இரவு சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 19 பயணிகள் காயமடைந்தனர். இவ்விபத்து குறித்து பாக்மதி விரைவு ரயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட், ரயில் பாதுகாவலர், பயணச்சீட்டு பரிசோதகர், பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலைய அதிகாரி, சிக்னல் பொறுப்பு அலுவலர் உள்ளிட்ட 40 ரயில்வே அலுவலர்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெற்கு ரயில்வே பாதுகாப்புத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

சென்னை சென்ட்ரலில் உள்ள சென்னை ரயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தில் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி தலைமையில் கடந்த புதன் கிழமை அன்று விசாரணை நடந்தது. அப்போது 40 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமில்லை என்றும், நட்டு, போல்ட் கழற்றப்பட்டதே காரணம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் முன்னதாக வழக்குப் பதியப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் மேலும்  ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே சட்டப்பிரிவு – 150
ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டப்பிரிவு 150ன் கீழ் ரயிலை சேதப்படுத்துதல் அல்லது தகர்க்க முயலுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

MUST READ