சென்னையை அடுத்த கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம் பேருந்து நிலையங்களை நிர்வகிக்கவும், பேருந்து நிலையத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் மாவட்ட வருவாய் அலுவலரான ஜெ.பார்த்தீபனை சிஇஓ ஆக நியமித்து, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவை புரட்டி போட வரும் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்கள்!
தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெ.பார்த்தீபன், கிளாம்பாக்கத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகளையும், பயணிகளின் குறைகளையும் கேட்டறிந்து நிவர்த்தி செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. அதிரடி ஆய்வை மேற்கொண்டார். பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த குடிநீரை பருகிப் பார்த்து ஆய்வுச் செய்தார். அதேபோல் பேருந்து நிலையத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இருக்கிறதா என பயணிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., “பொங்கலுக்கு பின் கிளாம்பாக்கத்தில் இருந்து படிப்படியாக ஆம்னி பேருந்துகள், மாநகர பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் எளிதாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகள் நிற்கும் இடத்தைப் பயணிகள் அறிந்துக் கொள்ள ஏதுவாக டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ் சினிமாவை புரட்டி போட வரும் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்கள்!
முதற்கட்டமாக அரசு விரைவுப் பேருந்துகள் மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளின் குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.