Homeசெய்திகள்தமிழ்நாடுகிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.30) காலை 11.00 மணிக்கு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மனசாட்சியே கிடையாதா…? அஜித்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….ஏன் தெரியுமா?

விழாவில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், சிவசங்கர், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடியில் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. 14 நடைமேடைகள், புற காவல்நிலையம், எஸ்கலேட்டர், லிப்ட் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரே நாளில் 2,310 பேருந்துகளை இயக்கம் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்துக்கு நெரிசலைக் குறைக்கும் வகையில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள ஏதுவாக பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

வௌியீட்டு தேதியை அறிவித்தது கேப்டன் மில்லர் படக்குழு

தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, ஓட்டுநர், நடத்துநர்களுக்கான ஓய்வறைகள் ஆகியவைக் கட்டப்பட்டுள்ளன.

MUST READ