கோடநாடு வழக்கு- எடப்பாடி ஜோதிடரிடம் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ஜோதிடரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு முடிவு செய்துள்ளனர்.
கடந்த 2017ல் நடந்த கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோரிடம் மறுவிசாரணை நடைபெற்றது. 2017ல் நீலகிரி மாவட்டத்தில் இருந்து பிற இடங்களுக்கு பேசி தொலைப்பேசி பதிவுகளை சேகரித்துள்ளனர். அண்மையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த உதவி ஆணையர் கனகராஜ் என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பாதுகபாப்பு அதிகாரியான கனகராஜ் அடிக்கடி சேலம் கனகராஜிடன் செல்போனில் பேசியது தெரியவந்தது. இந்நிலையில் கோடநாடு வழக்கின் முக்கிய குற்றவாளியான விபத்தில் உயிரிழந்த சேலம் கனகராஜ், உயிரிழக்கும் முன் குடும்பத்துடன் எடப்பாடியில் உள்ள ஜோதிடரை சந்தித்ததாகவும், அப்போது அவர் கண்டம் உள்ளதால் இன்று ஒரு நாள் தப்பித்துவிட்டால், பெரிய உயரத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக ஜோதிடர் கூறியதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் எடப்பாடியை சேர்ந்த ஜோதிடரை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக அவருக்கு வரும் மே முதல் வாரத்தில் சம்மன் அனுப்பி விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.