Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை அருகே தனியார் மருத்துவமனையில் திருட முயன்றவர் அடித்துக் கொலை!

கோவை அருகே தனியார் மருத்துவமனையில் திருட முயன்றவர் அடித்துக் கொலை!

-

கேரளாவில் பெண் மருத்துவர் கொலை : இந்திய மருத்துவ கூட்டமைப்பு கண்டனம்..

கோவை அருகே பீளமேடு தனியார் மருத்துமனையில் திருட முயன்றவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் மருத்துவமனைக்குள் புகுந்து இரும்பு கம்பிகளை திருட முயன்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மருத்துவமனை காவலாளிகள் 12 பேர் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரித்துள்ளனர். இதனையடுத்து 12 பேரும் ராஜாவை அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனைத்தொடர்ந்து ராஜாவுக்கு அதே மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இதில் உயிரிழந்த ராஜாவுக்கு சுகன்யா என்ற மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காவலாளிகள் 12 பேரையும் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ