Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை அருகே இன்று ஓய்வு பெற இருந்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் - காரணம் என்ன...

கோவை அருகே இன்று ஓய்வு பெற இருந்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் – காரணம் என்ன தெரியுமா?

-

கோவை மாவட்டம் ஆலாந்துறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் ஆலந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் கோவை ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார், அப்பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் மாணவி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது புகார் அளித்தும் பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன் மற்றும் ஆசிரியர்கள் அதனை மறைத்ததாக தெரிகிறது. இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 6 ஆசிரியர்கள் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் இன்று (30ம் தேதி) ஓய்வுபெற இருந்த தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

 

MUST READ