Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை அருகே பள்ளி மாணவன் மீது பள்ளி வேன் ஏறியதில் மாணவன் படுகாயம்

கோவை அருகே பள்ளி மாணவன் மீது பள்ளி வேன் ஏறியதில் மாணவன் படுகாயம்

-

கோவை அருகே பள்ளி மாணவன் மீது பள்ளி வேன் ஏறியதில் மாணவன் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் இருகூரைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இரண்டு மகன்களும் சிங்காநல்லூரை அடுத்த போட் ஹவுட் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் இருவரும் வழக்கம் போல பள்ளிக்கூடம் சென்று விட்டு, பள்ளி வேனில் இன்று மாலை வீடு திரும்பினர். அந்த நேரம் முதலில் வேனில் இருந்து ஒரு சிறுவன் இறங்கினார். அதற்கடுத்து 1ம் வகுப்பு படிக்கும் சிறுவன் இறங்குவதற்கு முன்பாகவே வேன் டிரைவர் வண்டியை எடுத்துவிட்டார். இதனை சற்று எதிபாராத சிறுவன் மீது வேனின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த சிறுவன் வலியில் அலறி துடித்த சம்பவம் காண்போரை கண் கலங்கச் செய்தது. இதனைத்தொடர்ந்து அருகிலுள்ளவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி காட்சி வெளியானது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளி வேன் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் மீது பள்ளி வேன் ஏறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ