Homeசெய்திகள்தமிழ்நாடுகோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்?

கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்?

-

 

சிறப்பு பேருந்து

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது? கோயம்பேட்டில் இருந்து தற்போது எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது? என்பது குறித்து தற்போது விரிவாகப் பார்ப்போம்!

#Rewind 2023: ‘மடிக்கும் ஸ்மார்ட்போன்கள் முதல் திவாலான விமான நிறுவனம் வரை’- 2023- ல் வணிகம் சார்ந்த நிகழ்வுகள் குறித்த தொகுப்பு!

SETC எனப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் புறப்படும். அதேபோல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, செங்கோட்டை, நாகர்கோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும்.

திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கான விரைவுப் பேருந்துகள் இனி கோயம்பேடு செல்லாது. தஞ்சாவூர், கும்பகோணம், வேளாங்கண்ணி, திருவாரூர், தருமபுரி, ஓசூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, கொடைக்கானல், எர்ணாகுளம், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கான விரைவுப் பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

#Rewind 2023: மணிப்பூர் கலவரம் முதல் ஆதித்யா- எல்1 விண்கலம் வரை…- 2023- ல் இந்தியாவில் நிகழ்ந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் அடங்கிய தொகுப்பு!

TNSTC பேருந்துகள் பொங்கல் பண்டிகை வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், ஆரணி, ஆற்காடு, செய்யாறு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம், திருப்பதி, நெல்லூர், திண்டிவனம், செஞ்சி, வந்தவாசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செஞ்சி, திருவண்ணாமலை, போளூர், சேத்பட் ஆகிய ஊர்களுக்கான TNSTC பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படும்.

ஈசிஆர் சாலை வழியாகச் செல்லும் பேருந்துகள் பண்ருட்டி, வடலூர், தஞ்சை, கும்பகோணம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ