கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவுந்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் தக்காளிவிலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது.தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை ரூ.130 மற்றும் ரூ.120 என விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தக்காளியின் விலை1 கிலோவுக்கு ரூ.10 குறந்துள்ளது.சில்லரை விற்பனையில் 150 என நிர்ணயித்து விற்கப்பட்டு வந்தது குறிப்பிடதக்கது.
கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை அதிகரித்துள்ள நிலையில் இன்று கோயம்பேடு சந்தையில் தக்காளியின் வரத்து அதிகரித்ததின் காரணமாக சற்று குறைந்துள்ளது.கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களாகவே நாள் ஒன்றுக்கு 300 டன் தக்காளி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டதால் தக்காளின் விலை அதிகரித்த நிலையில், இன்று நாள் ஒன்றுக்கு 400 டன் தக்காளி இறக்குமதி செய்யப்பட்டதால் ரூ.10 குறைந்துள்ளது .தக்காளின் வரத்து 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
தற்போது தக்காளியின் மொத்த விலை முதல் ரகம் ரூ.90 எனவும் ,அடுத்த ரகம் ரூ95 எனவும் நிர்ணயம் செய்து விற்கப்படுகிறது.சில்லரை விற்பனையில் ரூ.110 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது.கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் இருந்தும் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது.மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீண்டும் தக்காளி பயிரிடப்படுகிறது.எனவே தக்காளின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.