சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கக்கூடாது என போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டதால் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஒட்டு மொத்தமாக தோல்வி அடைந்துள்ளது – அண்ணாமலை விமர்சனம்
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை புதன்கிழமை இரவு முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லை என்றும், கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறினர்.
இந்த நிலையில், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திற்கு வந்த சிஎம்டிஏ அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் செல்லாதபடி தடுப்புகளை அமைத்தனர். இதனால் அதிகாரிகள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆம்னி பேருந்துகளை இயக்குவதில் குழப்பம் நீடித்ததால் முன்பதிவுச் செய்த பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய வசதிகள் இருப்பதாக சிஎம்டிஏ அதிகாரி தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் ஆயிரம் ஆம்னி பேருந்துகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ஆம்னி பேருந்துகள், கிளாம்பாக்கத்திலேயே நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்படுவதாகவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை கோயம்பேடு வருவதற்கு ரூபாய் 1,000 கட்டணத்தை கார் டேக்சிகள் வசூலிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.