Homeசெய்திகள்தமிழ்நாடுபாஜகவுடன் இணைந்து இரட்டை இலையை முடக்க முயன்றவர் ஓபிஎஸ் - கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

பாஜகவுடன் இணைந்து இரட்டை இலையை முடக்க முயன்றவர் ஓபிஎஸ் – கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

-

- Advertisement -

kp munusamy

பாஜகவுடன் இணைந்து இரட்டை இலையை முடக்க முயன்றவர் ஓபிஎஸ் என செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அப்போது பேசிய அவர், அதிமுக குறித்து பேச ஓபிஎஸ்-க்கு தகுதியில்லை. இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்க்கு, தொண்டர்களை அழைக்க என்ன உரிமை உள்ளது . பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியல் தலைவர்களை எச்சரிக்கிறேன். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். அதிமுக அலுவலகத்தை உடைத்து பொருட்களை திருடிச் சென்றவர் தான் ஓ.பன்னீர்செல்வம்; அதிமுக தொண்டர்களை அழைக்க ஓ. பன்னீர் செல்வத்திற்கு எந்த உரிமையும் இல்லை. அதிமுக கூட்டணி 2019 மக்களவைத் தேர்தலில் 18% வாக்குகளைப் பெற்றது; தற்போது ஈபிஎஸ் தலைமையில் அதிமுக 20.48% வாக்குகளை பெற்றுள்ளது. 2026 தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன், கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

kp munusamy

ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலையுடன் இணைந்து செயல்பட்டவர் ஓ .பன்னீர்செல்வம். பாஜகவுடன் இணைந்து இரட்டை இலையை முடக்கம் முயன்றவர் ஓபிஎஸ். ஓபிஎஸ் மேலும் மேலும் சோதனை அளிக்கிறார்..குழப்பத்தை ஏற்படுத்த சிலர் அறிக்கை விடுகிறார்கள். என இவ்வாறு அவர் பேசினார்.

MUST READ