Homeசெய்திகள்தமிழ்நாடுகிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை…  ஆட்சியரிடம் கிராம மக்கள் வைத்த கோரிக்கை..!

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை…  ஆட்சியரிடம் கிராம மக்கள் வைத்த கோரிக்கை..!

-

- Advertisement -

கிருஷ்ணகிரி அருகே எட்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் உடன் பேச்சுவார்த்தை

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை… ஆட்சியரிடம் கிராம மக்கள் வைத்த கோரிக்கை..!கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த மாணவி அதே பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் பெற்றோர் கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய அனைத்து ஆசிரியர்கள் மாற்ற வேண்டும், சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட மனைவியை வேறு பள்ளியில் சேர்த்து அவரது உயர்கல்வி வரை ஆகும் செலவை அரசு ஏற்க வேண்டும், எதிர்காலத்தில் அரசு வேலை வழங்க வேண்டும், தற்போது உள்ள நடுநிலைப் பள்ளிக்கு சுற்றுச்சூழல் மற்றும் புதிய கழிப்பறை கட்டித் தர வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

MUST READ