குவைத் தீ விபத்தில் காட்டுமன்னார்கோயில் அருகே முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். 2 வாரங்களில் சொந்த ஊர் திரும்பும் நேரத்தில் நடந்த சோகத்தால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.
இதில் 5 தமிழர்கள் உயிரிழந்தாக கூறபடும் நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை குவைத் விபத்தில் உயிரிழந்த செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
இவருக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது, சத்யா என்ற மனைவி உள்ளார் என்றும் இவருக்கு குழந்தைகள் கிடையாது என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக குவைத்தில் பணியாற்றி வந்த நிலையில் குடும்பத்தினருடன் இருப்பதற்காக வேலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கே முன்பு தான் சொந்த ஊருக்கு திரும்பி குடும்பத்தினருடன் இருந்து வந்துள்ளார்.
மீண்டும் குவைத் கம்பெனியிலிருந்து வர கூறியதால் கடந்த ஆறு மாதம் முன்பு மீண்டும் குவைத் சென்று வேலை பார்த்து வந்துள்ளார்.
குறிப்பாக அடுத்த 2 வாரங்களில் சொந்த ஊருக்கு வருவதாக இருந்த நிலையில் தான் தீ விபத்தில் மரணம் அடைந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
குவைத் தீ விபத்து – 3 தமிழர்கள் உள்ளிட்ட 41 இந்தியர்கள் உயிரிழப்பு (apcnewstamil.com)
மேலும் சின்னதுரை உடலை சொந்த ஊருக்கு உடனடியாக கொண்டு வர வேண்டும் என தமிழக அரசிற்கும், முதல்வருக்கும் கண்ணீரோடு கோரிக்கை வைத்துள்ளனர்.