Homeசெய்திகள்தமிழ்நாடுவழக்கறிஞர்கள் உள்பட 5 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ.!

வழக்கறிஞர்கள் உள்பட 5 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ.!

-

- Advertisement -

 

வழக்கறிஞர்கள் உள்பட 5 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ.!
File Photo

தடைச் செய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய ஆறு இடங்களில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்கறிஞர்கள் உள்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

யார் இந்த பிரிஜ் பூஷன்?- விரிவான தகவல்!

பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்ததை அடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் என்.ஐ.ஏ. நாடு முழுவதும் சோதனை நடத்தியது. அப்போது கைது செய்யப்பட்ட 10 நிர்வாகிகளிடம் நடத்திய விசாரணையில், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவைச் செய்து பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, மத்திய அரசு அந்த அமைப்பைத் தடை செய்தது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழகத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? இல்லை, ஆரிய மாடல் ஆட்சியா?- சீமான்

சென்னை, தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஆறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின் போது ஆயுதங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களைப் பறிமுதல் செய்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனையின் முடிவில் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த அப்துல் ரசாத், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் முகமது யூசுப், முகமது அப்பாஸ், திண்டுக்கல்லைச் சேர்ந்த கைஸர், தேனியைச் சேர்ந்த சாதிக் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுவரை பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் 15 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

MUST READ