Homeசெய்திகள்தமிழ்நாடுஎல்.இ.டி. திரைகள் அகற்றம்- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்!

எல்.இ.டி. திரைகள் அகற்றம்- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்!

-

 

"புற்றுநோய் மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு"- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!
Photo: Union Minister Nirmala Sitaraman

ராமர் கோயில் திறப்பு விழாவைத் திரையில் காண அனுமதி மறுக்கப்பட்டதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘நாகரா பணியில் கட்டப்பட்ட அயோத்தி கோயில்!’

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது; கோயிலில் எல்.இ.டி. திரை அகற்ற முயற்சி நடைபெறுகிறது. செங்கல்பட்டு அருகே 200 வீடுகள் கொண்ட கருநிலம் என்ற சிறிய கிராமத்தில் அயோத்தி நிகழ்ச்சியைக் காணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்காத பட்சத்தில் எல்.இ.டி. திரைப் பொருத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோயில் பகுதியிலும் எல்.இ.டி. கட்ட அனுமதி தரப்படவில்லை. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலிலும் காவலர்களைக் கொண்டு எல்.இ.டி. திரைகள் அகற்றப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் இன்று திறப்பு – முக்கிய பிரமுகர்களுக்கு மகா பிரசாதம்!

தமிழகத்தில் தி.மு.க. அரசு குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. இந்த விரோத தி.மு.க. அரசு தற்போது பிரதமர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 400- க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தி.மு.க. அரசு எல்.இ.டி. திரை வியாபாரிகளின் வயிற்றிலேயே அடிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ