Homeசெய்திகள்தமிழ்நாடு'லியோ' படத்தின் அதிகாலை 04.00 மணி காட்சிக்கு அனுமதியில்லை- சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

‘லியோ’ படத்தின் அதிகாலை 04.00 மணி காட்சிக்கு அனுமதியில்லை- சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

-

- Advertisement -
kadalkanni

 

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!
File Photo

‘லியோ’ திரைப்படம் வெளியாகும் நாளில் அதிகாலை 04.00 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹமாஸ் பிடியில் உள்ள 21 வயது நிரம்பிய இஸ்ரேலிய பெண்!

‘லியோ’ திரைப்படத்தின் அதிகாலை 04.00 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கக்கோரி, திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, இன்று (அக்.17) காலை 11.00 மணிக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “4 மற்றும் 7 மணி காட்சிக்கு அனுமதி தருவதில் சிக்கல்கள் உள்ளன. எந்த படத்திற்கும் அனுமதி அளிக்கவில்லை” என்றார்.

இதற்கு நீதிபதி, “5 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கிறீர்கள்; அதைச் செயல்படுத்த அனுமதிக்க வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பினார். தமிழக அரசு வழக்கறிஞர், “20 நிமிடங்களுக்கு இடைவெளி விட வேண்டுமென எந்த கட்டாயமும் இல்லை. காலை 09.00 மணிக்கு காட்சிகளைத் தொடங்க வேண்டும் என்பது தான் அரசின் விதி; அதை மீற முடியாது.

டெல் அவிவ், ஜெருசலேமில் ஏவுகணை தாக்குதல் முயற்சி!

கடந்த முறை ஒரு படத்தின் 4 மணி காட்சிக்கு சென்ற ரசிகர் உயிரிழந்தார்; சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது. விடுமுறை மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் விலக்கு; சாதாரண நாட்களில் விலக்கு தர முடியாது. லியோ படத்தின் டிரெய்லரை வெளியிட்ட போது, திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டது” என்று வாதிட்டார்.

நீதிபதி, “5 காட்சிகளுக்கு அனுமதி அளித்ததால் தானே அதிகாலை காட்சிக்கு அனுமதிக் கேட்கிறார்கள்” கூறியவர், லியோ படம் வெளியாகும் நாளில் அதிகாலை 04.00 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது; காலை 09.00 மணி காட்சிக்கு பதில் காலை 07.00 மணி காட்சிக்கு அனுமதிக்கோரி விண்ணப்பிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிவுறுத்தினார். அத்துடன், தயாரிப்பு நிறுவன கோரிக்கையைப் பரிசீலித்து நாளை (அக்.18) மதியத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

MUST READ