Homeசெய்திகள்தமிழ்நாடு"லியோ படத்தில் எத்தனை வன்முறைக் காட்சிகள் உள்ளன?"- நீதிபதிகள் கேள்வி!

“லியோ படத்தில் எத்தனை வன்முறைக் காட்சிகள் உள்ளன?”- நீதிபதிகள் கேள்வி!

-

 

சிதலமடைந்த மருத்துவமனை கட்டடம்- நீதிபதிகள் அதிரடி உத்தரவு!
File Photo

“லியோ திரைப்படத்தில் வன்முறைக் காட்சிகள் எத்தனை உள்ளன?” என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“அமலாக்கத்துறை சம்மன்கள் பொய்யானவை”- முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளதால் லியோ படத்திற்கு தடை விதிக்கக் கோரியும், அந்த திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக் கோரியும், லோகேஷ் கனகராஜ் மீது ஆயுதச்சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மதுரையைச் சேர்ந்த ராஜமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘லியோ’ திரைப்படத்தில் எங்கெங்கு வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளன? லியோ திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் எத்தனை உள்ளன? என்று கேள்வி எழுப்பினர்.

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு!

இது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

MUST READ